அல்லாஹ்க்கு நன்றி செலுத்துதல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாய் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

"நீங்கள் இளைப்பாருவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ் தான் படைத்தான், நிச்சியமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை" (அல்குர் ஆன் - 40:61)

நம்மை மனிதனாய் படைத்தான், பிறகு இஸ்லாமிய சமுகத்தில் பிறக்க செய்தான்.. பிறகு உம்மத்களிலே சிறந்த உம்மத்தான நமது முகமது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தாக படைத்தானே அவன் தான் இறைவன். அவன் ஒருவன் தான் உருவமற்றவன். அவனே அல்லாஹ்..

நம்மீது எவ்வளவு அருளை தந்து இருக்கிறான் , கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் ... ஆம் நம் உடல் அமைப்பு, கண்,காது, இதயம், மூளை, என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த உறுப்புக்களையெல்லாம் படைத்து அதன் வேலைகளை சீராய் அமைத்த அந்த அல்லாஹ்க்கு நாம் எவ்வாறு நன்றி செலுத்துகிறொம்..

நாம் குறிப்பாக தொழுகை மூலம் நன்றி செலுத்துவது :

ஒவ்வொரு வயது வந்த ஆண்/பெண் இஸ்லாமியருக்கு கடமையாக்கப்பட்ட
ஐவேளைத் தொழுகைமூலம் தான்.

அதாவது 24 மணி நேரத்தில் 5 * 5 நிமிசம் என்றால் 25 நிமிசம்தான்.. குறைவுதான் நமது நன்றிகள் அவனுக்கு போதாது.. நமது உடல் தேவைக்காக உணவை உண்கிறோம்.. அது ஜீரணிக்கிறது இதெல்லாம் படைத்த ரப்பால் செய்ய முடியும். இது போன்று ஒவ்வொரு நிமிடமும்


அவனை நினைத்து பார்க்க
அவனது அருள் கிடைக்க நாம்
அதிகம் அதிகமாய் அல்லாஹ்க்கு நன்றிசெலுத்த
அனைவரும் அவனிடமே பிரார்த்திப்போமாக!
ஆமின்..

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


என் அன்பான நண்பர்களுக்கு,

என் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்...



வலைப்பூ நட்பூ




தெரியாத முகங்களும்
தெரிந்தவைகளானது
கருத்துக்களாலும்...(comments)


அறியாத விசயங்களும்
அறிந்து கொண்டேன்.
அறிந்த விசயங்களையும்
அழகாய் புரிந்து கொண்டேன்.
கட்டுரைகளாலும்...(post)

பள்ளி நண்பர்களும்
பழகிய நண்பர்களும்
தொலைவில் இருந்தாலும்
தொடர்ந்தார்கள்.. (followers)


--
குறிப்பு: கவிதைப்போல் எழுதலாம் என ஆசை..

ரமழானை வரவேற்போம்.




ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் : 2-183)


இந்த மாதத்தில் நோன்பு இருந்து தொழுகை, ஜகாத், குர் ஆன் ஓதுதல், இஹ்திகாப், என நன்மையான காரியங்களை சுறுசுறுப்பாக செய்வதற்கும் மற்றும் நோன்பு இல்லாத மாதங்களிலும் இதையும் தொடர்ந்து செய்வதற்கு இறைவனிடம்இறைஞ்சுவோமாக!..

ரமழானை கண்ணியப்படுத்தி எல்லோரும் நல்ல அமல் செய்ய இறைவன் உதவி செய்வானாக.! ஆமின். மற்றும்



அனைவருக்கும் ரமலான் கரீம் ...வாழ்த்துக்கள்..

GMAIL-ல் TASKS என்ற புதிய வசதி


GMAIL- ‍ல் இப்பொழுது புதியதாக ஒரு வசதி வந்துள்ளது.. அதான் TASKS.... இதன் மூலம் நாம் எந்தந்த தேதியில் செய்ய வேண்டிய பணிகள் / வேலைகள் இது போன்று குறித்துக்கொள்ளலாம்,




இதனால் செய்ய வேண்டிய வேலைகள் சந்திப்புகள் என எழுதி வைத்துக்கொள்ளலாம். மிகவும் பயன்பெறக்கூடிய ஒன்றாகும்.

நமது TASKS LIST யை திறந்தால் என்ன செய்து முடிக்கவேண்டியது என்ன செய்யவேண்டியது எனத்தெரிந்துகொள்ளலாம். எனவே இதனால் நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாட்கள் அனைத்தையும் உங்களது EMAIL ல் ( gmail account ) பார்த்துப்பயன்பெறலாம்.

தங்கமான நேரம்

இந்த வலைப்பூ தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன.. இருந்தும். கொஞ்சம் கொஞ்மாய் வலைப்பூக்களின் தோட்டத்தில் தெளிவாகிறேன்...


இன்று கூட ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சொல்லலாம் என்று நமது இணைய நண்பனான கூகிலில் தேடினேன் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.. ஒன்றும் கிடைக்கவில்லை... நேரம் தங்கம் போன்றது என்பார்கள் ... ஆமாங்க இப்போதுதான் ஞாபகம் வந்தது.. தங்கம்...



தங்கத்தின் வேதியல் குறியீடு‍ AU
தங்கத்தின் அணு எண் 79 அதன் அணு எடை 196.967
தங்கம் 1064.43 C. ல் உருகும்

அப்புறம் அளவு (கேரட்) பற்றி

100 % = 24 karat
91.7 % = 22 karat
75.0 % = 18 karat
58.5 % = 14 karat
41.6 % = 10 karat

அவ்வளவுதான் கொஞ்சம் தேடிப்பிடித்த தகவளை இங்கு பகிர்ந்து கொண்டேன்...

நூலகம் நுழைவோம்

கல்வி பயில்வது என்பது பாடப்புத்தகங்களை மட்டும் மனப்பாடம் செய்து தேர்வை சந்தித்து வெற்றி பெருவது மட்டும் வெற்றியல்ல. நிறைய பொது அறிவு, தொழில் நுட்பம், இது போன்று பல வகையான தகவல்களையும், அறிவது நிறைய புத்தகங்களை படிப்பதில்தான் கிடைக்கப்பெறும்.



அனைத்து வகையான புத்தகங்கள், பத்திரிக்கைகள் எல்லாம்.. எங்கே கிடைக்கும் .. அதாங்க நம்ம ஒவ்வொரு ஊரில் உள்ள அரசு பொது நூலகம்.. இங்கு சென்று நம் நேரத்தை பயணுள்ளாத கழித்தால் பயன்பெறலாம்.

அது மட்டுமில்லை ,, தினசரி செய்தி தமிழ், ஆங்கில‌ நாளிதள்கள், வாரம் , மாதம் என வரும் அனைத்து பத்திரிக்கைகள், கிடைக்கப்பெறும்..... சொல்லப்போனால் சுலபமாக ஒரே நாளில் அனைத்து வகையான செய்திகளையும் பல நாளிதழ் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு அறிவியல், ஆன்மீகம், உடற்கல்வி, வணிகம், மருத்துவம் போன்ற தகவல் நிறைந்த பல வகையான‌ புத்தகங்கள் இருக்கும்.....

இன்னும் நூலகம் பற்றி தகவல்கள்...

உலகத்தில் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள "காங்கிரஸ் நூலகம்" (Library of Congress) அதன் இணையதள முகவரி : http://www.loc.gov/index.html


இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் கொல்கத்தாவில் உள்ள "இந்திய தேசிய நூலகம்" (National Library of India) அதன் இணையதள முகவரி : http://www.nlindia.org/index2.html

சென்னை நூலகம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் ஒரு தமிழ் இணையத்தளம் ஆகும் அதன் இணையதள‌ முகவரி : http://www.chennailibrary.com


நன்றி - சகோதரி ஜலீலா

தொடர்பவர்கள்

என்னைப்பற்றி

My Photo
அதிரை அபூபக்கர்
இறைவன் உதவியால் , எனக்கு அறிந்ததை அறியாதவர்களிடமும் சொல்ல முயல்பவன், எனக்கு அறியாததை அறிந்தவர்களிடமும் தெரிந்த கொள்ள ஆசைப்படுபவன்... நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அதிரையில்.....(Thanjavur District-TamilNadu-S.India)
View my complete profile

Blog Archive

கருத்துக்கள்


Free shoutbox @ ShoutMix

வந்தவர்கள்

தேதி அட்டவணை

வந்தவர்களின் வழி